திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முகக் கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து வருகின்றனர் இந்நிலையில் போலீசாரை மிஞ்சிய சுகாதாரத்துறை ஊழியர்கள், முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளை உருட்டுக்கட்டை உதவியுடன் அபராத வசூலில் ஈடுபட்டு வருவதால் வாகனத்தில் செல்லும்போது உருட்டுக்கட்டை தடுத்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் வாகன ஓட்டிகளிடமும் பொது மக்களிடமும் உருட்டுக்கட்டை வைத்துக்கொண்டு வசூலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்
செங்கம் அருகே சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு .
எழுதியவர்: mohan April 29, 2021, 6:24 am




You must be logged in to post a comment.