18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மூன்று இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் வசதியுடன் தற்காலிக கொரோனா கேர் சென்டர் துவக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

உசிலம்பட்டியில் மூன்று இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் வசதியுடன் தற்காலிக கொரோனா கேர் சென்டர் துவக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

எழுதியவர்: mohan April 28, 2021, 10:35 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் எழுமலை, செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதல் தற்போது வரை 242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 75 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 165 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனை, மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்த சூழலில் கொரோனா தொற்று உறுதியாகும் நபர்களை அந்தந்த பகுதிகளிலேயே தற்காலிக சிகிச்சை மையம் அமைத்து சிகிச்சை அளிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை களமிறங்கியுள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 6 இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா கேர் சென்டர்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் தனியார் பள்ளியிலும், கருமாத்தூரில் தனியார் கல்லூரியிலும், எழுமலை பகுதியில் தனியார் பள்ளி என மூன்று தற்காலிக கொரோனா கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டமாக சுமார் 204 படுக்கைகள் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு கேர் சென்டரிலும் தலா ஒரு மருத்துவர் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மற்றும் பாதுகாப்பு கருதி 2 காவல்துறை அதிகாரிகள் என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!