திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் கடந்த 06-04-2021 அன்று நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தபால்_வாக்கு செலுத்தும் வாக்காளர்கள், வாக்கு எண்ணிக்கை நாளான 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை வரை தங்களுக்கான கால அவகாசம் இருந்தாலும், அஞ்சல்
துறையின் மூலமாக வாக்கு செலுத்த வேண்டியுள்ளதால் அதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளர்கள் இன்று 28-04-2021 புதன்கிழமைக்குள் தங்களது வாக்கினை கட்டாயம் செலுத்தினால் தான் ஜனநாயக கடமை நிறைவேறும். எனவே, காலதாமதம் இன்றி வாக்களிக்க வேண்டும் என்று செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள்
எழுதியவர்: mohan April 28, 2021, 10:02 am




You must be logged in to post a comment.