17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் விவசாயி தற்கொலை. தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஒபிஎஸ் காரை முற்றுகையிட்ட உறவினர்கள்.

இராமநாதபுரத்தில் விவசாயி தற்கொலை. தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஒபிஎஸ் காரை முற்றுகையிட்ட உறவினர்கள்.

எழுதியவர்: mohan April 27, 2021, 5:43 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராமநாதபுரத்தைச் சேர்ந்த சகாதேவன் (45). விவசாயியான இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் முத்துவீரன் என்ற தாழ்த்தப்பட்டவரிடமிருந்து வீடு வாங்கியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தி.விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருமங்கலத்திலிருந்து தேனி நோக்கி சென்ற துணை முதல்வர் ஒ.பி.எஸ். வந்த காரை சாலை மறியலில் ஈடுபட்டடிருந்த மக்கள் ஒபிஎஸ் – ன் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத போலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண், பெண் என அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்., இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!