மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி நெடுஞ்சாலையில் உள்ள குப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசாணம் மகன் விஜய்(20). இவர் பெங்களுரில்
முறுக்கு வியாபாரம் செய்து வந்த நிலையில் தனது சொந்த கிராமமான குப்பணம்பட்டியில் பங்குனி மாத திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. திருவிழா கடந்த 10நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில் அவரது பெற்றோர்கள் மட்டும் பெங்களுருக்கு சென்றனர். இந்நிலையில் தோட்ட வேலைக்காக விஜயை மட்டும் வீட்டிலேயே விட்டு சென்ற நிலையில் தோட்டத்திற்கு செல்வதற்காக குப்பணம்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கடந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜய் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிசிக்சைக்காக சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தை குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பணம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி. போலீசார் விசாரணை.
எழுதியவர்: mohan April 27, 2021, 1:24 pm




You must be logged in to post a comment.