17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை லாரி மோதி படுகாயம் அதிர்ஷ்டவசமாக மகள் காயமின்றி தப்பினார்.

மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை லாரி மோதி படுகாயம் அதிர்ஷ்டவசமாக மகள் காயமின்றி தப்பினார்.

எழுதியவர்: mohan April 27, 2021, 7:04 am

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மதுரை பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையில் ஸ்டேட் பாங்க் காலனி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜயகுமார் வயது 50 இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவர் இன்று மதியம் 12 30 மணி அளவில் வங்கிக்கு சென்று விட்டு மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந் தார் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தை சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோதி கார் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் ஆனது லாரியின் சக்கரத்தில் சிக்கியது இதில் படுகாயமடைந்த விஜயகுமார் மீட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆட்டோ மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரியின் அடியில் சிக்கி இருந்த இருசக்கர வாகனத்தை மீட்டு லாரியை ஓரமாக நிறுத்தினார் சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!