18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

எழுதியவர்: mohan April 26, 2021, 10:10 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பாறைப்பட்டி, வலையபட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நிலக்கடலையை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 80நாட்களுக்கு பிறகு நிலக்கடலை பயிர்கள் அனைத்தும் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்யும் பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

மேலும் கடந்த ஒருவாரமாக உசிலம்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில் நிலக்கடலைகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தற்போது நிலக்கலை 1கிலோ 30 முதல் 45ருபாய் வரை விற்பனை நடைபெறுவதால் போதிய விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!