திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை ஒட்டி வத்தலக்குண்டு நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ள காட்சி. வத்தலகுண்டு நகரில் 24 மணி நேரமும் மின்சாரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையம் முற்றிலுமாக ஒரு காக்கா குருவி கூட இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. அதேபோன்று வத்தலகுண்டு கடைவீதி வத்தலகுண்டு மதுரை சாலை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலை வத்தலக்குண்டு பெரியகுளம் சாலை வத்தலகுண்டு கொடைக்கானல் சாலை அனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் முற்றிலுமாக வெறிச்சோடி இருந்தது. நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் குமரன். வத்தலகுண்டு போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் பிச்சைக்காரன் மற்றும் போலீசாருடன் சிறப்பான முழுமையான பாதுகாப்பு கொடுத்தார்கள்.
முழு ஊரடங்கு ஒட்டி வத்தலக்குண்டு நகரம் முழுவதும் வெறிச்சோடி உள்ள காட்சி.
எழுதியவர்: mohan April 26, 2021, 6:17 am




You must be logged in to post a comment.