17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு;எஸ்.பி. சுகுணாசிங் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு;எஸ்.பி. சுகுணாசிங் எச்சரிக்கை..

எழுதியவர்: mohan April 25, 2021, 9:58 am

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஊரங்கை மீறி வெளியில் தேவை இல்லாமல் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியதாவது: இன்று முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மருத்துவமனை, மருந்து கடை போன்றவற்றிற்கு செல்வதற்காக வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். விதியை மீறி கடைகளை திறக்கக்கூடாது. மருத்துவமனை, மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களாக இருந்தால் அவர்களது கையில் திருமண அழைப்பிதழ் வைத்திருக்க வேண்டும். ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!