17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் ஞாயிறு முழுஊரடங்கில் விவசாயிகள், சந்தைக்கு வரும்போது காவல்துறையினர் வழிமறிப்பதை நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகை.

உசிலம்பட்டியில் ஞாயிறு முழுஊரடங்கில் விவசாயிகள், சந்தைக்கு வரும்போது காவல்துறையினர் வழிமறிப்பதை நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகை.

எழுதியவர்: mohan April 24, 2021, 7:31 pm

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனாவை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்து. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்யாவசிய பொருட்கள் கொண்டு வரும் விவசாயிகள், வாகனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தற்போது கோடைகால பருவத்தில் மல்லிகை விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் சாகுபடி செய்துவருகிறன்றனர். மேலும் உசிலம்பட்டி பூ சந்தைக்கு சுமார் 15டன் மல்லிகைப்பூ தினமும் விற்பனைக்கு வருவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் பூ விவசாயம் பாதிக்கப்படாமலிருக்க பறித்த மல்லிகைப்பூ மற்றும் அத்யாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்து அபராதம் விதிக்கவோ, வழக்குபதிவோ செய்ய கூடாது என வலியுறுத்தி உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதனைதொடர்ந்து கோட்டாட்சியர் ராஜ்குமார் அலுவலகத்தில் இல்லாததால் அங்கிருந்த வருவாய்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!