18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் சுகாதார சீர் கேடு…. விடுதலை சிறுத்தை கட்சி கண்டனம்…சீர் செய்ய கோரிக்கை..

கீழக்கரை நகர் சுகாதார சீர் கேடு…. விடுதலை சிறுத்தை கட்சி கண்டனம்…சீர் செய்ய கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2021, 5:08 pm

கீழக்கரையில் சாக்கடை நீர் ஆங்காங்கே தொடர்ந்து வெளியில் ஓடி கொண்டு இருக்கின்கிறது. கீழக்கரை முழுவதும் குப்பைகள் உடனுக்குடன் தேங்கவிடாமல் எடுக்க வேண்டும் என்றும், வார் கால்களில் பல இடங்களில் மூடி இல்லை. கீழக்கரை முழுவதும் தெரு மீன் விளக்குகள் பல இடங்களில் ஏறியவில்லை.

கீழக்கரையில் தொடர்ந்து  ஊர் முழுவதும் ஆங்காங்கே சாக்கடை நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது பொது மக்களுக்கு நோய் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கு நிரந்தர திர்வு இல்லை. பல காலங்கள் ஓடி விட்டன. தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டு தான் இருக்கின்றோம். அப்போது வரும் பிரச்னை சரி செய்து கொடுத்தாலும் இதற்கு நிரந்தரமாக தீர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்கடை வார் கால்களில் பல இடங்களில் மூடி இல்லை திறந்ததாகவே பல இடங்களில் காணப்படுகின்றன .கீழக்கரையில் குப்பைகள் பல இடங்களில் மக்கிய நிலையில் தேங்கி கிடக்கின்றது. ஊர் மக்களின் சுகாதார நலன் கருதி, நோய் வாய்ப்பு ஏற்படும் முன்பு, இதற்கு நிரந்தரமாக தீர்வு தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும், கீழக்கரை பொது மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் பாசித் இல்யாஸ் தன் கோரிக்கையில் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!