தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையாக வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் பொதுக்கூட்டங்கள், கோவில் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நடன கலைஞர்கள், ஒலி,ஒளி அமைப்பாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள பனகல் பில்டிங் அருகில் தஞ்சாவூர் மேடை நடன கலைஞர்கள் மற்றும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வாழ்வுரிமை குறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொரோனாவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க கோரியும், அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்களை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கையும் விடுத்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
தஞ்சாவூரில் உள்ள பனகல் பில்டிங் அருகில் நடன கலைஞர்கள் மற்றும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் வாழ்வுரிமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுதியவர்: mohan April 24, 2021, 8:14 am




You must be logged in to post a comment.