17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு…

கீழக்கரையில் புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2021, 8:41 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்ளக்சில் H.R FITNESS SPOT என்ற பெயரில் புதிய உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.  இந்த பயிற்சி கூடத்தை கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திறந்துவைத்தார். உடற்பயிற்சிக் கூடம் உரிமையாளர்  சாலை தெருவை சேர்ந்த ரியால் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியின் போது திமுக நகர செயலாளர் பஷீர் அகமது,  திமுக மாணவர் அணி அமைப்பாளரும் மஹ்துமியா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் மற்றும் கீழக்கரை முக்கியஸ்தர்கள், உடற்பயிற்சிகூட மாஸ்டர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!