17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஓடும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்து சிதறியதில் 3பேர் காயம். போலீசார் விசாரணை.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஓடும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்து சிதறியதில் 3பேர் காயம். போலீசார் விசாரணை.

எழுதியவர்: mohan April 23, 2021, 12:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் (பிஆர்பி) பேருந்து கொங்கபட்டியில் வந்துகொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் கருத்திவீரன் (45) மற்றும் பேருந்தில் முன்பக்க இருக்கையில் பயணித்த இரு பயணிகள் காயமடைந்தனர். சம்பவமறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து பேருந்தில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி பெட்டியிலிருந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டு காயமடைந்தவர்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்கா போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!