18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan April 23, 2021, 8:12 am

மதுரையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியினர் மாலை செலுத்தி மரியாதை செலுத்த வந்ததால் மோதல் ஏற்பட்டது.அதற்கு காரணமான பிஜேபி கட்சியினரை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் , இன்று மதுரை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசாரால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!