தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்க சுகாதாரதுறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கோயில் திருவிழாக்கள், குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் குறைந்த அளிவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி
கலந்துகொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டி கிராமத்தில் திறந்தவெளியில் புதியதாக 4அடி உயரமுள்ள சிவலிங்க சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவலிங்கத்திற்கு சந்தனம், பால், நெய், கோமியம், இளநீர், பழம், தேன் உள்ளிட்டவைகளை வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடந்து சிவலிங்கம் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைதொடர்ந்து சிவலிங்கம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டியில் சிவலிங்கம் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி
எழுதியவர்: mohan April 20, 2021, 12:02 pm




You must be logged in to post a comment.