17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் .

மேல்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் .

எழுதியவர்: mohan April 19, 2021, 3:07 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.மேல்பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேன்மொழி மக்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு மேற்கொண்டனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் தாமாக முன்வந்து 80 மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசிசெலுத்தி கொண்டனார். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி எழுத்தர் விஜய்பாபு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!