17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது 2 டிராக்டர் கள் பறிமுதல் .

இராஜபாளையத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது 2 டிராக்டர் கள் பறிமுதல் .

எழுதியவர்: mohan April 19, 2021, 7:07 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததுதகவலின் பெயரில் இராஜபாளையம் அய்யனார் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அய்யனார். கோவில் சாலை ஆறாவது மைல் டேம் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரிந்ததுதொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (28) செந்தில்குமார் (22) மற்றும் கணபதிசுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த தொந்தியப்பன்(30) மற்றும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன்(22) என 4 பேரையும் போலீஸ் சார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு டிராக்டர் மற்றும் மணலையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!