18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருமகனை காப்பாற்ற முயன்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்.

மருமகனை காப்பாற்ற முயன்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்.

எழுதியவர்: mohan April 18, 2021, 9:00 am

கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கூடல்புதூர் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் கண்ணன் 60.இவர் கூடல்புதூர் எஸ்.வி.பி .நகரில் நின்றுகொண்டு இருந்தார்.அப்போது அவருடைய மருமகன்மீது 16 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதை பார்த்த கண்ணன் ஓடிச் சென்றுமரு மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை விட்டுவிட்டுமாமனார் கண்ணன் மீது பிளாஸ்டிக் சேர் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!