இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார காங்கிரஸ் சார்பில் உச்சிப்புளி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முகக் கவசம் வழங்கப்பட்டது. மண்டபம் வட்டாரத் தலைவர் விஜயரூபன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், துல்கீப், கார்குடி சேகர் முன்னிலையில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா வழங்கினார். முன்னாள் வட்டார தலைவர் ரெத்தினம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், மாவட்ட செயலாளர் ராஜா, துணை செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் முஸ்தபா, உச்சிப்புளி நகர் தலைவர் நாகரத்தினம உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உச்சிப்புளியில் முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கல் .
எழுதியவர்: mohan April 17, 2021, 12:57 pm




You must be logged in to post a comment.