17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநகர் மொட்டை மலை குறிஞ்சி நகர் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.

திருநகர் மொட்டை மலை குறிஞ்சி நகர் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.

எழுதியவர்: mohan April 16, 2021, 10:48 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திரு நகர் குறிஞ்சி நகர் பகுதியில் மொட்டை மலை எனும் பகுதி உள்ளது இங்கு அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் திருப்பரங்குன்றம் தாசில்தார் மூர்த்தி மற்றும் திருநகர் காவல் ஆய்வாளர் காந்திமதி இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் குறிப்பிட்ட வீடுகளை இடிக்காமல் விட்டதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணபட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அனைத்து வீடுகளையும் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.வீடுகளை இழந்த பொதுமக்கள் அழுத காட்சி பரிதாபமாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!