17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஆய்வு பணி..

செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஆய்வு பணி..

எழுதியவர்: mohan April 16, 2021, 10:24 am

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் சீவநல்லூர் ஊராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளர் இராதா அவர்கள் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் சீவநல்லூர் பகுதி மக்களுக்கு மாஸ்க் அணிவதின் அவசியம், கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், பாதுகாப்புடன் இருத்தல் குறித்து வலியுறுத்தப்பட்டது.கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆனந்த், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம், சீவநல்லூர் ஊராட்சி செயலர் இசக்கி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!