18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் அரசு அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

செங்கத்தில் அரசு அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

எழுதியவர்: mohan April 15, 2021, 12:29 pm

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகின்றனர் இதனை அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருந்து வருவதாகவும் இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஒவ்வொரு அரசு அலுவலர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பு ஊசி மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் முகக் கவசம் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவும் நோய் தொற்றிலிருந்து முழுமையாக காத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தெரிவித்தார் இந்நிலையில் ஒவ்வொரு அரசு அலுவலக அதிகாரிகளையும் வரவழைத்து தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கும் முக கவசம் தனிமனித இடைவெளி கிருமிநாசினி உள்ளிட்டவைகளை முறையாகப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் யாருக்காவது உடல் வெப்பம் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக செங்கம் வட்டார மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து அதற்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது இந்த கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டு கொரோனா பரவலைத் தடுக்க தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!