18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக கோவில் நிலத்தில் மாடுகளை கட்டி நான்கு ஏர் பூட்டி உழுத திருப்பரங்குன்றம் மக்கள் .

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக கோவில் நிலத்தில் மாடுகளை கட்டி நான்கு ஏர் பூட்டி உழுத திருப்பரங்குன்றம் மக்கள் .

எழுதியவர்: mohan April 15, 2021, 11:54 am

சித்திரை முதல் நாளான இன்று உலகெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஏழு ஊர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியிலுள்ள திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் நான்கு ஏர்களை கட்டி அதில் மாடுகளை பூட்டி உழவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.பிரம்பு குச்சியில் முனியில் ஆணியடித்து பூக்களை சுற்றி கையில் வைத்து விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்வானது நடைபெற்றது.அதைத்தொடர்ந்து தென்பரங்குன்றம் குடைவரை கோவிலில் ஏழு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த வருடத்தில் விவசாயத்திற்கான கூலி நிர்ணயம் மற்றும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிராம மக்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த நாளேரில் செய்தால் வெள்ளாமை செழித்து, செல்வங்கள் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதனால் இந்த நிகழ்வில் முதியவர்கள், இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.சென்ற ஆண்டு ஊரடங்கால் இந்நிகழ்வு நடைபெறவில்லை என்றும் இந்த வருடம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!