17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவி உள்ளிட்ட இருவர் தூக்கிட்டு தற்கொலை.

மாணவி உள்ளிட்ட இருவர் தூக்கிட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan April 15, 2021, 11:46 am

டிவி பார்ப்பதை தந்தை கண்டித்ததால்மகள் தூக்கு போட்டு தற்கொலை மதுரைதிருநகர் தேவிநகர் 4வது தெரு சேர்ந்தவர் பவானீஸ்வரி 14 .இவர் 9-வது வகுப்பு படித்து வந்தார். அவர் வீட்டில் தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் .இதை அவரது தந்தை மாரிமுத்து கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பவானீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்மா பால முருகேஸ்வரி திரு நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…… இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்.(2)கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலைமதுரை மதிச்சியம் ஆழ்வார் புரத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி சித்ராதேவி 40. செல்வம் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் .இந்நிலையில் சம்பவத்தன்றும் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இவரது பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்படி சித்ராதேவி பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்த சித்ராதேவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்துமதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!