18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி பகுதிகளில் சாரல் மழை, பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு.

சிவகாசி பகுதிகளில் சாரல் மழை, பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு.

எழுதியவர்: mohan April 14, 2021, 11:02 am

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை சாரல்மழை பெய்தது. மேலும் தொடர்ந்து விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் சாரல்மழை பெய்து வருவதால், வெப்பம் குறைந்து இதமான குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வெட்கை குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி பகுதிகளில் காலை நேரத்திலேயே சாரல்மழை பெய்ததால் பட்டாசு ஆலைகளில், பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெயில் இல்லாத நிலையும், மேக மூட்டமான இதமான குளிர் நிலையும் இருந்து வருவதால், வெப்பம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!