17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே குடும்பத்தகராறு காரணமாக செல்போன் டவர் கம்பத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி.

செங்கம் அருகே குடும்பத்தகராறு காரணமாக செல்போன் டவர் கம்பத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி.

எழுதியவர்: mohan April 13, 2021, 4:31 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் குடும்ப தகராறு காரணமாக செல்போன் டவர் கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.தண்டம்பட்டு பகுதியை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ராஜா 45. அவரது மனைவி அலமேலு இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகாறில் ராஜா மனைவி அலமேலு கணவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், மேலும் தனது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டு சென்றுள்ளதாகவும் இதனால் எனது சகோதரர்கள் மணி மற்றும் கண்னதாசன் இருவரும் சொத்தை தராமல் ஏமாற்றி வருவதாக கூறி எனக்கு என்னுடைய ஆவனங்கள் மற்றும் என்னுடைய சொத்தை மீட்டு தருமாறு செல்போன் டவர் கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் மற்றும் மீட்பு பணித்துறையினர் ராஜாவிடம் துரிதமாக செயல்பட்டு சமரசத்தில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறி பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். சொத்து தகராறு காரணமாக செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!