17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜர் பல்கலைகழகதினக்கூலி பணியாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும் – டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கோரிக்கை.

காமராஜர் பல்கலைகழகதினக்கூலி பணியாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும் – டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கோரிக்கை.

எழுதியவர்: mohan April 13, 2021, 10:27 am

மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைகழக உயர்நிலை & கடைநிலை பணியாளர் நலச்சங்கத்தின் சார்பாக கருத்தரங்கு செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைவேந்தர் கிருஷ்ணன் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து காமராசர் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மற்றும் 8 தினக்கூலி பணியாளர்களை பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பதிவாளர் வசந்தா, பேராசிரியர்கள் பாரி பரமேஸ்வரன், தீதையாளன் உட்பட பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!