17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அரசு போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

எழுதியவர்: mohan April 13, 2021, 10:11 am

மதுரை திருமங்கலம் சாலையில் திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகில் அரசுப்பேருந்து பணிமனை உள்ளது. இந்த டெப்போவை சேர்ந்த நகரப்பேருந்துகள் இரவு நேரங்களில் டெப்போவில் நிறுத்தப்படுவது வழக்கம். இதற்காக டெப்போவிற்க்கு வரும் பேருந்துகள் சாலையின் ஒருபுறம் மட்டும் வரிசையாக நின்று செல்லாமல் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பேருந்தை நிறுத்துவதால் இரவு நேரங்களில் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மதுரை திருமங்கலம் செல்லும் முக்கிய சாலையில் இந்த அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் இப்பகுதியில் செல்லும் இரவு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவிக்க நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!