17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூரில் லேசான நிலநடுக்கம் பொதுமக்கள் பீதி .

திருப்பத்தூரில் லேசான நிலநடுக்கம் பொதுமக்கள் பீதி .

எழுதியவர்: mohan April 12, 2021, 5:57 pm

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்,குரி சிலாப்பட்டு, கொரட்டி ஆகிய பகுதிகளில்   லேசான நில அதிர்வு ஏற்பட்டது.ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.சுமார் 3 வினாடிகள் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் ஒருசில இடங்களில் பீதியுடன் காணப்பட்டனர்.இந்திய புவியியல் மையமும் இதை உறுதிசெய்து உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மலையின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இப்போது திருப்பத்தூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!