மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உசிலம்பட்டி – வத்தலகுண்டு சாலையில் உள்ள உத்தப்பநாயக்கணூரில் போலீசார் வாகன சோதணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து
போலீசார் சோதணை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. அதனைதொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நல்லொச்சான்பட்டி கிராமத்தைச் சேர்நத ஜெயராமன்(35) மற்றும் கீரிபட்டியைச் சேர்ந்த வனராஜா(42) என்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது.
எழுதியவர்: mohan April 11, 2021, 11:51 am




You must be logged in to post a comment.