17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைப்பாஸ் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 15 பவுன் தங்க சங்கிலியை பறித்த சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை

மதுரை பைப்பாஸ் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 15 பவுன் தங்க சங்கிலியை பறித்த சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை

எழுதியவர்: mohan April 11, 2021, 10:57 am

மதுரை பைப்பாஸ் சாலையில் தீக்கதிர் அருகே சனிக்கிழமைதோறும் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஜெயசங்கரி என்ற பெண் காய்கறி பொருட்கள் வாங்க சந்தைக்கு வந்துள்ளார். அப்போது அவர் அவ்வழியாக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவருக்கு பின்னால் வந்து ஜெயசங்கரி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மதுரை செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குறிப்பாக ஆள்நடமாட்டும் அதிகம் மிகுந்த வாரசந்தை நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் நடைபெற்ற இச்சம்வபம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!