தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மாமியார் மறைவையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக தமிழக முதல்வர் பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.திண்டுக்கல் வழியாக தேனி மாவட்டம்; சென்ற அவர் இரங்கல் நிகழ்ச்சியை முடித்து விட்டு சாலை
மார்க்கமாக மதுரை விமானநிலையம் சென்று சென்னை சென்றார்.முதல்வரின் வருகையையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கணவாய் மலையில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 12 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அவ்வழியே சென்ற பேருந்து கார் உள்பட அனைத்து வாகனங்களும் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டால் பெண்கள குழந்தைகள் உள்பட அனைவரும் கடும் வெயிலில் அவதிப்பட்டனர்.சுட்டெரிக்கும் வெயிலில் குடிக்த் தண்ணீர் கூட கிடைக்காமல் நடுக்காட்டில் பயணிகள் தவித்தனர்.
முதல்வர் வருகையையொட்டி 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடும்ட வெயிலில் பயணிகள் அவதி
எழுதியவர்: mohan April 10, 2021, 2:25 pm




You must be logged in to post a comment.