18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காளையார் கோவில் அருகே கார் நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

காளையார் கோவில் அருகே கார் நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

எழுதியவர்: mohan April 10, 2021, 9:59 am

மதுரையில் இருந்து இராமனாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 11 பேர் சீயலோ காரில் சென்றுகொண்டிருநதனர். கார் சிவகஙகை மாவட்டம் காளையார்கோவில் உழவூரணி என்னும் இடத்தில் வளைவில் திரும்பும் போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி அல்லிராணி,ஆறுமுகம்,ராஜா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.8 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து காளையார்கோவில் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!