18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள பொக்குலாங்கரடு மலையில் திடீர் தீவிபத்து. தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்து தீ பரவாமல் தடுத்தனர்.

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள பொக்குலாங்கரடு மலையில் திடீர் தீவிபத்து. தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்து தீ பரவாமல் தடுத்தனர்.

எழுதியவர்: mohan April 9, 2021, 12:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் உள்ளது பொக்குலாங்கரடு மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியில் திடீரென தீபற்றி எரிய தொடங்கியது. பற்றிஎரிந்த தீ பாதியளவு மலைப்பகுதியில் மலமலவென கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உசிலமபட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மலைப்பகுதியில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் பீச்சி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்கொள் கொண்டு வந்தனர். மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து கடும் வெயிலினால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மலையில் ஏற்பட்ட தீயால் சிறு சிறு வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!