மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி(45) என்பவருக்கு சொந்தமான சுமார் 20அடி நீளமும், 30அடி அகலமும், 110 அடி ஆழமுள்ள (தண்ணீர் உள்ளது) கிணற்றில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த பசு மாடு ஒன்று விழுந்து கிடப்பதாக
அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 110அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிகொண்டிருந்த பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1மணி நேரம் போராடி கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதனைதொடாந்து அதே பகுதியை சேர்ந்த கருப்பையாவிற்கு சொந்தமான பசுமாடு என்பது தெரியவந்த நிலையில் பசுமாட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
110 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.
எழுதியவர்: mohan April 8, 2021, 3:39 pm




You must be logged in to post a comment.