17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி விற்பனை களைகட்டி உள்ளது.

செங்கம் பகுதியில் வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி விற்பனை களைகட்டி உள்ளது.

எழுதியவர்: mohan April 8, 2021, 3:30 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வழக்கமாக மே மாதங்களில் தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இதனால், செங்கம் பகுதிகளில் காலை முதலே அனல்காற்று வீச தொடங்குகிறது. இதன்காரணமாக இரவில் புழுக்கம் அதிகமாக ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் போளூர் சாலை, பழைய பேரூந்து நிலையம், பெங்களூர் சாலை பகுதிகளில் வெயிலை சமாளிக்க தர்பூசணி விற்பனைக்கு குவிந்துள்ளன. அவ்வாறு குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி ஒரு கிலோ ₹ 20லிருந்து விற்பனை செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தணிக்க தர்பூசணி விற்பனை களைகட்டி உள்ளது. மேலும், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 99.0 டிகிரி வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது 100.08 டிகிரியாக காணப்படுகிறது. இந்த மாதமே இதுபோன்று வெயில் கொளுத்தி வருவதால், அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் கொடுமை இன்னும் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!