17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொந்த ஊரான கல்புளிச்சான்பட்டியில் உள்ள அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்தார்.

உசிலம்பட்டி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொந்த ஊரான கல்புளிச்சான்பட்டியில் உள்ள அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்தார்.

எழுதியவர்: mohan April 6, 2021, 7:18 pm

தமிழகம் முழுவதும் ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி மையங்களில் தேர்தல் உத்தரவுப்படி காலை 7 மணிக்கு வாக்குபதிவு நடைபெற தொடங்கின. வாக்காளர்களுக்கு முகமுகவசம் வழங்கப்பட்டு, கிரிமிநாசனியை கொண்டு கைகளை கழுவிய பின்பு வாக்கு சாவடி மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அதனை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் காலை முதல் விறு விறுப்பாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் பிவி கதிரவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரின் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்கு சாவடி மையத்தில் அவரது விரலில் மை வைக்கப்பட்டு வேட்பாளர் கதிரவன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!