வேலூர் மாவட்டம் கே.பி.குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் – காட்பாடி சாலையில் பி.கே.புரம் பகுதியில்நேற்று இரவு 10.30 மணியளவில்
தேர்தல் கண்காணிப்பு குழு காரில் ஆய்வு மேற்கொண்டு சென்றுகொண்டு இருக்கும்போதுஎதிர்திசையில் வேகமாக வந்த லாரி காரின் மீது மோதியது. இதில் பறக்கும் படை அதிகாரிகள் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பலத்த காயம் அடைந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் ஏட்டு மாலதி (45) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.புகைப்பட கலைஞர் பிரகாசம். தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திகேயன், ஓட்டுநர் செல்வராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.இதில் வீடியோகிராபர் பிரகாசம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து கே.வி.குப்பம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.சாலை விபத்தில் பெண் காவலர் உயிரிழந்தது காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படைவாகனத்தின் லாரி மோதல்.பெண் போலீஸ் உயிரிழப்பு. 4 பேர் காயம்
எழுதியவர்: mohan April 5, 2021, 10:50 am




You must be logged in to post a comment.