17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு வங்கியில்கவரிங் நகையை அடகு வைத்தவர் கைது.

அரசு வங்கியில்கவரிங் நகையை அடகு வைத்தவர் கைது.

எழுதியவர்: mohan April 2, 2021, 9:54 am

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை தல்லாகுளம் பகுதியில் விநாயகர் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வந்த மேலூர்னபெரிய சூரக்குண்டுவை சேர்ந்த ராஜா 43 என்பவர் 26 கிராம் நகைகளை அடகு வைக்க முயற்சி செய்தார்.அப்போது நகைமதிப்பீடுசெய்யப்பட்டபோது அதுகவரிங் நகை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி அதிகாரி கணபதி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவரிங்நகையை அடகுவைத்த ராஜாவை கைது செய்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!