17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 2023ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை,எளியோர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்- துணை முதல்வர் பன்னீர்செல்வம்

2023ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை,எளியோர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்- துணை முதல்வர் பன்னீர்செல்வம்

எழுதியவர்: mohan April 1, 2021, 5:26 pm

மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அய்யப்பனும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் மாணிக்கமும், திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் மூன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களிடையே இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அதனைதொடர்ந்து மக்களிடையே பேசிய துணை முதல்வர் வருகிற 2023ம் ஆண்டுக்குள் தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடு இல்லாத ஏழை,எளியோருக்கு காண்ங்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என கூறினார். மேலும் அதிமுக அரசு என்றாலே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, பெண்கள் நாட்டின் கண்கள் எனவும், இரு பெண்கள் பிறந்தால் வங்கி கணக்கில் பணம் வைப்புத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு கொண்டுவந்த அரசு அம்மாவின் அரசு என மக்களிடையே பேசி இரட்டைஇலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!