17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது;மு.க.ஸ்டாலின் ஆலங்குளத்தில் பேச்சு..

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது;மு.க.ஸ்டாலின் ஆலங்குளத்தில் பேச்சு..

எழுதியவர்: mohan March 31, 2021, 2:40 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில் பேசிய ஸ்டாலின், பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், ஆலங்குளம் வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது மறைந்த தமிழக முதல்வர்களான காமராஜருக்கும், கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை குறிப்பிட்டு பேசினார். உடல் நலிவுற்ற நிலையிலும் காமராஜர் தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தியதையும் அப்போது அவர் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில்,பாஜக கூட்டணி என்னதான் பொய் பிரசாரம் செய்து வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். அதிமுகவினரின் ஊழல் குறித்து புள்ளி விவரங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.2014-2016-ல் ஜெயலலிதாவை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என மோடி பேசினார். யாரோ கூறுகிறார்கள் என்பதற்காக எதையாவது பிரதமர் பேசலாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்துப் பேசி வருகிறார். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ள நீங்கள் சட்ட ஒழுங்கை காப்பற்றுவோம் என்கிறீர்கள். 125 நாட்களாக மழை பனியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக, பாஜக கூட்டணி என்ன தான் பொய் பிரசாரம் செய்து வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!