17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து வேட்பாளர்களின் முகவர்களுடன் விளக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து வேட்பாளர்களின் முகவர்களுடன் விளக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan March 30, 2021, 5:03 pm

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் பணிகளில் அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 410 வாக்கு சாவடி மையங்கள் உள்ளது. வாக்குசாவடி மையங்களில் (விவி பேட்டன் இயந்திரங்கள்) இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் குறித்தும், வாக்குசாவடிகளில் பொருத்தப்படும் இயந்திரங்கள் மூலமாகவே இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து உசிலம்பட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஜோதியாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கு எல்இடி விவி மூலம் விளக்க பயிற்சியும், ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!