திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தனித்தொகுதி தேமுதிக வேட்பாளர் செங்கம் தொகுதிக்குட்பட்ட மண்மலை, பிஞ்சூர், அரட்டவாடி, தாழையூத்து, ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் எஸ் அன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது தேமுதிக வேட்பாளர் அன்பு பேசுகையில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார் வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளரை ஆதரித்து அனைத்து கிராம மக்களும் நூற்றுக்கணக்கானோர் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி மாவட்ட கழக செயலாளர் பரந்தாமன் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், சரவணன், தேமுதிக ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் அசோக்குமார், பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சிவா, கோவிந்தன், கிளை செயலாளர் கோபி, ஜெமினி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சாத்தனூர் கூட்டுக் குடிநீர் மூலம் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைப்பேன்!தேமுதிக வேட்பாளர் அன்பு உறுதி.
எழுதியவர்: mohan March 30, 2021, 4:51 pm




You must be logged in to post a comment.