18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீடுபுகுந்து கத்தியை காட்டி முதியவரிடம் நகை பறிப்பு .

வீடுபுகுந்து கத்தியை காட்டி முதியவரிடம் நகை பறிப்பு .

எழுதியவர்: mohan March 30, 2021, 10:12 am

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோணையார் கோவில் தெருவில் வசித்து வரும் முதியதம்பதிகளான குமரவேல் (வயது 74) மற்றும் திருக்கம்மாள் (வயது72).இன்று வழக்கம்போல் வீட்டின் பக்கத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்க்கு திருக்கம்மாள் சென்றிருந்த நிலையில்,வீட்டில் தனியாக படுத்திருந்த குமரவேலை சில மர்ம நபர்கள் வீடுபுகுந்து கத்திக்காட்டி மிரட்டி அவர் கழுத்தில் இருந்த 4 சவரன் சங்கிலியை பறித்து, மற்ற பணம் நகைகள் எங்கு வைத்துள்ளாய் என்று மிரட்டி கேட்டுள்ளனர்.உடனே பக்கத்து வீடான தனது மகனிடம் உள்ளது என கூறவும், முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்து மதுரை ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,சம்பவ இடத்திற்க்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் தடையங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த முதியவரை வீடுபுகுந்து மிரட்டி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!