17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தமிழக முதல்வரின் தாயாரை இழிவாக பேசிய எம்பி ராசாவை கண்டித்து பெண்கள் கருப்புகொடியை ஏந்தி, துடைப்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டியில் தமிழக முதல்வரின் தாயாரை இழிவாக பேசிய எம்பி ராசாவை கண்டித்து பெண்கள் கருப்புகொடியை ஏந்தி, துடைப்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan March 29, 2021, 12:56 pm

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தும் விதமாக கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்தும், அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அதிமுகவினரும், பெண்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலமபட்டி மதுரை மெயின்ரோட்டில் முதல்வரின் தாயாரை கொச்சைப்படுத்தி பேசிய எம்பி ஆ.ராசாவை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் கருப்புகொடியை பிடித்தும், செருப்பை கையில் பிடித்தும், துடப்பத்தை ஏந்தியும் கண்டன கோசமுழக்கங்களை எழுப்பி ஆ.ராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!