18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணி மற்றும் அனுமன் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணி மற்றும் அனுமன் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan March 29, 2021, 10:16 am

முதல்வரின் தாயார் குறித்து, தி.மு.க.வின் துணை பொதுச் செயலர் ஆ.ராசா தெரிவித்த கருத்தால், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வரையும், அவரது அம்மாவையும், ராசா கொச்சையாக வர்ணனை செய்திருந்தார்.இதுகுறித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் வீடு சுத்தம் செய்யும் துடைப்பங்கள் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்திருப்பரங்குன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராஜா வை கண்டித்து அனுமன் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம். ராஜா படத்தை தீ வைத்துக் கொளுத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அனுமன் சேனா அமைப்பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தாயாரை விமர்சித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராஜா வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் ராஜா படத்தை தீவைத்துக் கொளுத்த முயன்றனர் .உடனே அருகில் இருந்த போலீசார் படத்தை கைப்பற்றி ராமலிங்கம் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!