17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரச்சாரத்தின் செல்லப்பிராணியை குஞ்ச வாக்கு சேகரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு .

பிரச்சாரத்தின் செல்லப்பிராணியை குஞ்ச வாக்கு சேகரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு .

எழுதியவர்: mohan March 29, 2021, 10:11 am

மதுரை மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நடராஜன் தொடர்ந்து நாள்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்இந்த நிலையில் நேற்று மாலை மதுரை சமயநல்லூர் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய ஊர்மெச்சிகுளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போதுகல்லூரி மாணவி ஒருவர் தான் வளர்த்த செல்லப் பிராணி யுடன் (நாயுடன்)வந்தபோது செல்லப்பிராணியை கொஞ்சி , அதற்கு என்ன சாப்பாடு கொடுக்கிறீர்கள் அதனுடைய பெயர் என்ன என்று கேட்டு தனது வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்அமைச்சருடைய இந்த செயல் அப்பகுதியில் இருந்த மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்ததுஅதேபோன்று மறுபுறம் செல்லூர் ராஜூ வை நேரு மாமா போல நினைத்து குழந்தைகள் அனைவரும் தங்களது கைகளில் ரோஜா பூவை ஏந்தியவாறு அவரை ஆனந்தமாக வரவேற்பு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கே எங்கள் வாக்கு என்று கூறி வரக்கூடிய வேளையில்மதுரை மேற்குத் தொகுதியில் செல்லப்பிள்ளையாக மூன்றாவது முறை அதே தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்கள் அனைவரும் பூரணகும்பம் மரியாதையும் ஆரத்தி எடுத்தும் தொடர்ந்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!