17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் ..வேட்பாளா் வாக்குறுதி

மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் ..வேட்பாளா் வாக்குறுதி

எழுதியவர்: mohan March 28, 2021, 10:44 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதி ஜவ்வாது மலை கிராமங்களில் அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.நைனாக்கண்ணு ஜமுனாமத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிளையூா், கல்லாத்தூா், ஊா்கவுண்டனூா், பன்ரேவ், கோவில்கொல்லை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் சாதனைகள், தோ்தல் அறிக்கையை துண்டுப்பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்தாா். அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனா கண்ணு பேசுகையில்; மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் இப்போது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் எம்.சி.அசோக் தலைமையில் அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். செங்கம் மேற்கு மகரிஷி மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே கே மணி ,மாவட்ட பிரதிநிதி மேல்பெண்ணாத்தூர் முருகன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!