18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா..

கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2021, 1:25 pm

கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (26.03.2021) கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை அல் பைய்யினா அகாடமி முதல்வர் ஆலிம் செய்யது ஜமாலி தலைமையேற்று நடத்தினார். மேலும் சிறப்பு பேச்சாளராக மௌலவி ஹுசைன் மன்பஈ  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கீழக்கரை அளவில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கும், மதரஸா மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மதரஸாவின் முதல்வர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி, தாளாளர் அஹமது சுஹைல், நிர்வாகிகள் அஜ்மல் கான், முஹைதீன் அடுமை, அப்பாஸ் கான் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான், நிர்வாகிகள் சைஃபுள்ளாஹ் ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியாக மதரசா நிர்வாகி முஹம்மது சுஹைல் நன்றியுறையுடன் நிறைவுபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!